சென்னையில் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சென்னையில் 3000 வீடுகளை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சென்னையில் 3000 வீடுகளை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், வீட்டிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், சிலர் வெளியே நடமாடுவதாக வந்த தகவலை அடுத்து தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பு: கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 3000 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளன.

அரசின் உத்தரவை மீறி வெளியில் சென்றால், அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும். வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும். 'கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. வீட்டில் இருக்காமல் வெளியே சுற்றுவது தெரிந்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.