கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக எல்லைகள் மூடல், ஊரடங்கு, கடைகள் மூடல், பஸ், ரயில்கள் நிறுத்தம் என நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கொரோனாவால் நாடு முழுவதும் 425 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழப்புகளை தடுப்பதற்காக, மலேரியா நோய்க்கு எதிராக வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இதே மருந்தை இதற்கு முன்பாக அமெரிக்கா, மற்றும் ஜோர்டான் நாடுகள் பரிந்துரை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவுக்கு மருந்து; இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை