கடந்த 2 ஆண்டுகளில் முகேஷ் அம்பானி, 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அரை டஜன் சிறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளார். நவ்ப்ளோட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 85% பங்குகளை கடந்த ஆண்டு ரிலையன்ஸ் வாங்கியது. இந்நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான டிஜிட்டல் இருப்பை உறுதி செய்வது, ஆன்லைன் வணிக நிர்வாகம், சந்தைப்படுத்தல் போன்ற பணிகளை செய்கிறது.
பெங்களூரைச் சேர்ந்த ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனமான அஸ்டீரியா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் 52% பங்குகளை ரிலையன்ஸ் வைத்துள்ளது. 2021 டிசம்பருக்குள் 87.3% பங்குகளை வாங்கிவிடும். இந்நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரங்கம், கட்டுமானம் மற்றும் விவசாயத் துறை சார்ந்த வளங்களை ஆய்வு செய்ய, கண்காணிக்க ட்ரோன் சேவையை வழங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஹாப்டிக்கில் ரூ.700 கோடி முதலீடு செய்துள்ளது. இந்நிறுவன தொழில்நுட்பத்தை சாம்சங், கோககோலா, டாடா குழுமம், ஓயோ ரூம்ஸ் உள்ளிட்டவை பயன்படுத்துகின்றன. இதன் ஏஐ தொழில்நுட்பம் உரையாடல் வழி கட்டளைகளை நிறைவேற்றும். கடந்த மார்ச்சில் ஜியோ மியூசிக் மற்றும் சாவன் செயலியை ஜியோசாவனாக ஒருங்கிணைத்தது. இதன் மதிப்பு 1 பில்லியன் டாலர்கள். அமேசான் மியூசிக், கானா மியூசிக் போன்றவற்றிற்கு இவை போட்டியாகும்.
அதே போல் ஆன்லைன் வணிக சந்தையில் அமேசான், பிலிப்கார்ட்டுக்கு சவால் தரும் வகையில் ஃபைன்ட் நிறுவனத்தில் ரூ.295.25 கோடி முதலீடு செய்துள்ளனர். இவை 2021 டிசம்பர் முதல் இயங்க உள்ளது.
ஆன்லைன் வணிக நிர்வாகம், சந்தைப்படுத்தல் போன்ற பணிகளை செய்கிறது